TNPSC Thervupettagam

இ-கிசான் உபஜ் நிதி

March 15 , 2024 126 days 176 0
  • எண்ணிம தளமான இ-கிசான் உபஜ் நிதி, பதிவு செய்யப்பட்ட கிடங்குகளில் வைக்கப் பட்டுள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்கள் மீது விவசாயிகள் கடன் பெற உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் விவசாயிகள் எந்த உத்தரவாதமும் இல்லாமல் 7 சதவீத வட்டி விகிதத்தில் எளிதாக கடன் பெற முடியும்.
  • விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் ஆனது, மின்னணு வகையில் பரிமாற்றம் செய்யக் கூடிய கிடங்கு ரசீது (e-NWR) அடிப்படையில் வழங்கப்படும்.
  • கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் தற்போது 5,500க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கிடங்குகள் உள்ளன.
  • மொத்த வேளாண் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்