நுகர்வோர் குறை தீர்க்கும் இ-தாகில் தளமானது இப்போது 15 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் செயல்பட்டு வருகிறது.
இதற்காக 'edaakhil.nic.in' என்ற பெயரில் நுகர்வோர் புகார்களை மின்னணு-தாக்கல் செய்வதற்கான வலைப் பயன்பாட்டைத் தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ளது.
இந்த மின்னணு-தாக்கல் ஆனது இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தால் தொடங்கப் பட்டது.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 8, அன்று இதைச் செயல்படுத்திய முதல் மாநிலம் தில்லி ஆகும்.
2019 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2020 ஆம் ஆண்டின் ஜூலை 20 முதல் நடைமுறைக்கு வந்தது.
இது நுகர்வோர் ஆணையத்தில் நுகர்வோர் தங்களது புகார்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கும், புகாரைத் தாக்கல் செய்வதற்கான கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்குமான வசதிகளைக் கொண்டுள்ளது.