TNPSC Thervupettagam

இ-திரிஷ்டி மென்பொருள்

December 11 , 2018 2048 days 570 0
  • இந்திய ரயில்வேயானது இ-திரிஷ்டி என்ற மென்பொருளை அறிமுகப் படுத்தியுள்ளது. இது நாட்டின் எந்த ஒரு இடத்திலும் உள்ள ரயில்களின் காலந் தவறாமை, சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் மற்றும் இதர பல விசயங்களை மத்திய இரயில்வே அமைச்சகம் கண்காணிக்க உதவுகிறது.
  • இந்த மென்பொருளானது இந்திய இரயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (IRCTC - Indian Rail Catering and Tourism Corporation) சமையலறைகளோடு நேரலையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இது முன்பதிவு செய்த மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகளின் நிகழ்நேர நிலையையும் அளிக்கும்.
  • இந்த மென்பொருளானது ரயில்வே தகவல் அமைப்புக்கான மையத்தால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்