ஆந்திரப் பிரசேதத்தில் உண்டவல்லியில் இ-பிரகதி - என்ற முக்கிய தளத்தை அமாமாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயடு தொடங்கி வைத்தார்.
இ-பிரகதி ஆனது எல்லாத் துறைகளை இணைக்கவும் தன்னிச்சையாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் தளமாகவும் செயல்படும்.
இ-பிரகதி என்பது டிஜிட்டல் துவக்க முயற்சியின் முன்னோடியாகும். இதன் நோக்கம் 34 துறைகள், 336 தன்னாட்சி நிறுவனங்கள், மற்றும் 745 கூடுதல் சேவைகள் ஆகியவற்றை மக்களுடன் இணைப்பது ஆகும்.
இந்தத் திட்டத்தின் மூலம், அம்மாநில அரசு ‘சன்ரைஸ் AP 2022’ என்ற தொலைநோக்கு பார்வையை அடைய எண்ணுகிறது.