TNPSC Thervupettagam

இக்லா-S வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள்

May 20 , 2024 191 days 201 0
  • ரஷ்ய நாட்டின் மற்றொரு இக்லா-S எனப்படும் மிகக் குறுகிய தூர வரம்புடைய வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகளை (VSHORAD) இந்திய ராணுவம் விரைவில் பெறத் தயாராக உள்ளது.
  • இது ரஷ்ய நாட்டினால் உருவாக்கப்பட்ட மனிதர்களால் சுமந்துச் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்பு (MANPADS) ஆகும்.
  • இது ஒரு தனி நபர் அல்லது குழுவினரால் இயக்கப்படக் கூடிய கையில் சுமந்துச் செல்லக் கூடிய வகையிலான பாதுகாப்பு ஆயுத அமைப்பாகும்.
  • இது தாழ்வாகப் பறக்கும் விமானங்களை வீழ்த்தும் வகையிலும், சீர்வேக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற விமான இலக்குகளை அடையாளம் கண்டு தடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது 500 மீட்டர் முதல் 6 கிலோமீட்டர் வரையிலான தொலைவில் இயங்கும் திறனையும், 3.5 கிலோமீட்டர் உயரம் வரையுள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டுள்ளது.
  • இஸ்ரேலிய நாட்டின் இரண்டு ஹெர்ம்ஸ்-900 எனும் நடுத்தர உயர வரம்புடைய நெடு நேர இயக்க திறன் கொண்ட ஆளில்லா வான்வழி வாகனங்களையும் (UAV) இராணுவம் பெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்