இக்லா-S எனப்படும் கையில் எளிதாக வைத்துப் பயன்படுத்தக்கூடிய விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்கச் செய்வதற்காகவும், உரிமத்துடன் அவற்றை உற்பத்தி செய்ய அனுமதிப்பதற்காகவும் ரஷ்யா ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.
இக்லா-S என்பது மனிதர்களால் எளிதில் சுமந்து செல்லக் கூடிய வான் பாதுகாப்பு அமைப்பு (MANPADS) ஆகும் என்பதோடு, இது எதிரி விமானத்தை வீழ்த்துவதற்காக ஒரு தனிநபர் அல்லது படைப்பிரிவினரால் பயன்படுத்தப்பட இயலும்.
கையில் எளிதாக வைத்துப் பயன்படுத்தக் கூடிய இந்தப் பாதுகாப்பு அமைப்பு ஆனது, தாழ்வாக பறக்கும் விமானங்களை வீழ்த்தும் திறன் கொண்டது.
இது சீர்வேக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற வான்வழி இலக்குகளை அடையாளம் கண்டு எதிர்கொள்ளும்.
2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யா 45 சதவீதமும், பிரான்சு 29 சதவீதமும் மற்றும் அமெரிக்கா 11% சதவீதப் பங்கினையும் கொண்டுள்ளன.