TNPSC Thervupettagam

இசட் மோர் சுரங்கம்

January 19 , 2020 1687 days 633 0
  • ஜம்மு-காஷ்மீரில் 6.5 கிலோமீட்டர் நீளமுள்ள இசட்-மோர் சுரங்கப் பாதையை நிறைவு செய்வதற்கான சலுகை ஒப்பந்தமானது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் கையெழுத்தானது.
  • இசட்-மோர் சுரங்கமானது ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோன்மார்க் என்னும் சுற்றுலா இடத்திற்கு அனைத்து வானிலைகளையும் தாங்கக் கூடிய ஒரு சாலை இணைப்பை வழங்க உள்ளது.
  • தேசிய  நெடுஞ்சாலை எண் - 1ல் உள்ள ககாங்கீர் மற்றும் சோன்மார்க் ஆகிய இடங்களுக்கு இடையே இரு வழிப் பாதைகள் கொண்ட  சுரங்கப்பாதையாக  இது அமைய உள்ளது.
  • கடுமையானப் பனிப்பொழிவின் காரணமாக குளிர் காலத்தில் இது பெரும்பாலும் மூடப் பட்டிருக்கும்.
  • இசட்-மோர் சுரங்கம் என்பது இந்தியாவின் லடாக் பிராந்தியத்தில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் கார்கில் பகுதிகளுக்கு இடையேயான ஒரு சுரங்கப் பாதையாகும்.
  • சோன்மார்க் மற்றும் ககாங்கீருக்கு இடையிலான சாலையின் இசட் உருவாக்கம் காரணமாக இந்த சுரங்கப் பாதையானது இந்தப் பெயரைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்