TNPSC Thervupettagam

இட ஒதுக்கீட்டு விகிதம் அதிகரிப்பு

November 12 , 2023 250 days 167 0
  • பீகாரில் அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரும் இட ஒதுக்கீட்டுத் திருத்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப் பட்டது.
  • இது அம்மாநிலத்தில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடுகளை அம்மாநிலத்தில் 65 சதவீதமாக உயர்த்த உள்ளது.
  • இது உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 சதவீதம் என்ற உச்ச வரம்பிலிருந்து அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • தற்போது, மாநில வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீத இடஒதுக்கீடும், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12 சதவீதமும், பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு 16 சதவீதமும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு 1 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய இட ஒதுக்கீட்டுத் திட்டத்தில் பட்டியலிடப்பட்ட சாதியினர் - 20%, பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் – 2%, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- 43% என்ற அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்