தமிழ்நாடு மாநில அமைச்சரவையானது மருத்துவப் படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஓர் அவசரச் சட்டம் இயற்றுவதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த உள் இடஒதுக்கீடானது 7.5 முதல் 10%ற்குள் இருக்கும்.
இது இந்தக் கல்வியாண்டிலிருந்து மருத்துவப் படிப்புகளின் சேர்க்கைகளுக்காக வேண்டி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
இது குறித்த நீதிபதி P. கலையரசன் தலைமையிலான குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.