- இராஜஸ்தான் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (MBC-MOST BACKWARD CLASS) கீழ் உள்ள குஜ்ஜர்ஸ் உள்பட 5 பிரிவினருக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (OBC-OTHER BACKWARD CLASS) கீழ் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநிலத்தில் அரசாங்க வேலைக்கு ஆள்சேர்ப்பு ஆகியவற்றில் 21% இட ஒதுக்கீடு அளிப்பதைத் தெளிவுபடுத்தியது.
- மிகவும் பிற்படுத்தப்பட்ட 5 வகுப்புகளாவன :
- பஞ்சாரா/பால்டியா/லபானா
- காடியா/லோகர்/காடால்யா
- குஜ்ஜர்/குர்ஜர்
- ராய்கா/ரேபாரி
- கடாரியா (காடரி)
ஆகியவை ஆரம்பத்தில் 1994-ல் ஒபிசி வகுப்பில் பட்டியலிடப்பட்டது.
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 5 பிரிவுகளின் விண்ணப்பதாரர்கள், பொதுப் பிரிவின் கீழ் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் முதலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின் (21%) கீழ் கருதப்படுவர். அதன் பின்னர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் (1%) கருதப்படுவர்.