TNPSC Thervupettagam

இடம் பெயர் பறவைகள் – சில்கா ஏரி

November 25 , 2017 2557 days 1374 0
  • பல்லாயிரக்கணக்கான மைல்களை கடந்து லட்சக்கணக்கான இடம் பெயர் பறவைகள் சில்கா ஏரியை நோக்கி வரத்தொடங்கி உள்ளன.
  • சில்கா ஏரியின் கரையில் அமைந்துள்ள சில்கா மற்றும் மங்களஜோடி கிராமங்களில் உள்ள நலபானா பறவைகள் சரணாலயத்தின் ஈர நிலங்களில் முக்கிய பறவைகளின்கூட்டம் காணப்படுகின்றன.
  • ஊசிவால் வாத்துகள், இடம் பெயரும் வாத்துகள், உள்ளான் பறவைகள், கருவால் வாத்துகள் போன்ற பல பறவைகள் இங்கு இடம் பெயர்ந்து வந்துள்ளன.
சில்கா ஏரி
  • சில்கா ஏரி ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் காயல் (lagoon) ஆகும்.
  • இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய காயலாகும்.
  • அமெரிக்காவின் நியூ கேலடோனியாவில் உள்ள புதிய கேலடோனியன் பவளப்பாறை திட்டுகள் (Barrier Reef) உலகின் முதல் மிகப் பெரிய காயலாகும்.
  • சில்கா ஏரியானது ஒரிஸா மாநிலத்தில், வங்கக்கடலில், தயா (daya) நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.
  • இது இந்திய துணைக்கண்டத்தில் அமைந்திருக்கிற இடம்பெயரும் பறவைகளுக்கான மிகப்பெரிய குளிர்கால தங்குமிடப் பகுதியாகும்.
  • 1981-ல் சில்கா ஏரியானது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களுக்கான ராம்சார் உடன்படிக்கையில் (wetland of international importance under the Ramsar Convention) சேர்க்கப்பட்ட முதல் இந்திய ஈரநிலமாகும் (Wetlands).
  • IUCN-னின் சிவப்பு தரப்பட்டியலில் பட்டியலிடப்பட்டு உள்ள மிகவும் அரிய, அழியத்தகு பறவை மற்றும் விலங்கு இனங்கள் இந்த காயலில் (lagoon) வசிக்கின்றன. இது இந்தியாவில் உள்ள உயிர்பல்வகைத் தன்மையுடைய முக்கிய பகுதி  (Hotspot) களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்