பல்லாயிரக்கணக்கான மைல்களை கடந்து லட்சக்கணக்கான இடம் பெயர் பறவைகள் சில்கா ஏரியை நோக்கி வரத்தொடங்கி உள்ளன.
சில்கா ஏரியின் கரையில் அமைந்துள்ள சில்கா மற்றும் மங்களஜோடி கிராமங்களில் உள்ள நலபானா பறவைகள் சரணாலயத்தின் ஈர நிலங்களில் முக்கிய பறவைகளின்கூட்டம் காணப்படுகின்றன.
ஊசிவால் வாத்துகள், இடம் பெயரும் வாத்துகள், உள்ளான் பறவைகள், கருவால் வாத்துகள் போன்ற பல பறவைகள் இங்கு இடம் பெயர்ந்து வந்துள்ளன.
சில்கா ஏரி
சில்கா ஏரி ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் காயல் (lagoon) ஆகும்.
இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய காயலாகும்.
அமெரிக்காவின் நியூ கேலடோனியாவில் உள்ள புதிய கேலடோனியன் பவளப்பாறை திட்டுகள் (Barrier Reef) உலகின் முதல் மிகப் பெரிய காயலாகும்.
சில்கா ஏரியானது ஒரிஸா மாநிலத்தில், வங்கக்கடலில், தயா (daya) நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.
இது இந்திய துணைக்கண்டத்தில் அமைந்திருக்கிற இடம்பெயரும் பறவைகளுக்கான மிகப்பெரிய குளிர்கால தங்குமிடப் பகுதியாகும்.
1981-ல் சில்கா ஏரியானது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களுக்கான ராம்சார் உடன்படிக்கையில் (wetland of international importance under the Ramsar Convention) சேர்க்கப்பட்ட முதல் இந்திய ஈரநிலமாகும் (Wetlands).
IUCN-னின் சிவப்பு தரப்பட்டியலில் பட்டியலிடப்பட்டு உள்ள மிகவும் அரிய, அழியத்தகு பறவை மற்றும் விலங்கு இனங்கள் இந்த காயலில் (lagoon) வசிக்கின்றன. இது இந்தியாவில் உள்ள உயிர்பல்வகைத் தன்மையுடைய முக்கிய பகுதி (Hotspot) களில் ஒன்றாகும்.