TNPSC Thervupettagam

இடம் பெயர்ந்த உயிரினங்களின் வளங்காப்புத் தொடர்பான உடன்படிக்கை குறித்த COP14

March 4 , 2024 137 days 167 0
  • இடம் பெயர்ந்த வனவிலங்குகளின் வளங்காப்புத் தொடர்பான உடன்படிக்கையின் பங்குதாரர்கள் மாநாட்டின் 14வது கூட்டம் (CMS COP 14) ஆனது உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது.
  • 14 புலம்பெயர்ந்த இனங்களைப் பட்டியலிடுவதற்கான முன்மொழிவுகள் மற்றும் உலகளாவிய வனவிலங்குகளுக்கான பல தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள இந்த உடன்படிக்கையின் பங்குதாரர் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
  • இந்தப் பட்டியலிடல் ஆனது, இந்த இனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் வளங்காப்பு முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இடம் பெயர்ந்த உயிரினங்களுக்கு ஏற்படும் பல்வேறு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், வளங்காப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், அந்த இனங்கள் காணப்படும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த முன்மொழிவுகள் வலியுறுத்தியுள்ளன.
  • எண்ணிக்கைக் குறைவு மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் பல இனங்கள் 'எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்', 'அருகி வரும்' அல்லது 'மிக அருகி வரும் இனம்' என அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • இடம் பெயர்ந்த உயிரினங்களின் வளங்காப்பு தொடர்பான உடன்படிக்கையானது பான் உடன்படிக்கை என்று பிரபலமாக அறியப்படுகிறது.
  • 1979 ஆம் ஆண்டில் கையெழுத்தான இந்த உடன்படிக்கை 1983 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்