TNPSC Thervupettagam

இடம்பெயர்வு மற்றும் மேம்பாடு குறித்த அறிக்கை

May 15 , 2021 1164 days 562 0
  • உலக வங்கியானது சமீபத்தில் தனது இடம்பெயர்வு மற்றும் மேம்பாடு குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குப் பணம் அனுப்புவது 2020 ஆம் ஆண்டில் 1.9% குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • இது 2020 ஆம் ஆண்டில் 540 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் 2019 ஆம் ஆண்டில் 548 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.
  • பணம் செலுத்தல் (வரவு) (Remittance) என்பது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்படும் மொத்தத் தொகையின் அளவாகும்.
  • இது வணிக வழங்கீடுகளாகவும் இருக்கலாம் () குடும்ப உறுப்பினர், நண்பர்களுக்கு அனுப்பப்படும் பணமாகவும் இருக்கலாம்.
  • வெளிநாட்டுப் பணத்திற்கு எதிராக ஒரு நாட்டின் பண மதிப்பை நிலையாக வைத்திருக்க இவை உதவுகின்றன.
  • அந்நிய நேரடி முதலீட்டையடுத்து வளரும் நாடுகளுக்கான இரண்டாவது பெரிய மூலமாக இருப்பது பணம் செலுத்துதலே (வரவே) (Remittance) என்று உலக வங்கி கூறுகிறது.
  • பண வரவு அதிகரிக்கும் போது அதனைப் பெறும் நாட்டினுடைய பண மதிப்பு உயர்வதோடு வெளிநாட்டு பணத்தின் மதிப்பும் குறைகிறது.

குறிப்பு

  • 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவானது வெளிநாட்டிலிருந்துப் பணத்தைப் பெறுவதில்  மிகப் பெரிய நாடாக உள்ளது   
  • 2020 ஆம் ஆண்டில்  பணத்தை அனுப்புவதில் மிகப் பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது (68 பில்லியன் டாலர்)
  • 2019 ஆம் ஆண்டில்  இந்திய நாடானது 83.3 பில்லியன் டாலர் பணவரவினைப் பெற்று உள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டில் 0.2% என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பண வரவானது 17% என்ற அளவிற்கு குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்