இஸ்ரோ நிறுவனமானது, மேம்படுத்தப்பட்ட இடர் குறித்த முன்னெச்சரிக்கை அனுப்பும் கருவியை (DAT) உருவாக்கியுள்ளது.
கடலில் உள்ள மீனவர்கள் மீன்பிடி படகுகளில் இருந்த படி அவசரச் செய்திகளை அனுப்பும் மேம்பட்ட திறன்களையும் அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்தக் கருவியின் முதல் வடிவம் ஆனது, 2010 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைப் பயன்படுத்தி தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மூலம் அனுப்பப்படும் தகவல், மத்தியக் கட்டுப்பாட்டு நிலையத்தில் (INMCC : இந்தியச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம்) பெறப்படுகிறது.
இங்கு மீன்பிடி படகின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த முக்கிய எச்சரிக்கை சமிக்ஞைகள் கண்டறியப் படுகின்றன.
இந்தத் தகவலைப் பயன்படுத்தி, இடர்பாட்டில் உள்ள மீனவர்களைக் காப்பாற்றச் செய்வதற்காக வேண்டி, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு MRCC ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்கிறது.
தற்போது வரை, 20,000க்கும் மேற்பட்ட DAT கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.