கடலோரப் பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கான தன்னுடைய முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியக் கடலோரக் காவல் படையானது (Indian Coast Guard - ICG) ICGS C – 437 எனும் இடைமறிப்புப் படகை குஜராத்தின் போர்பந்தரில் கடலோரக் காவல் படையில் இணைத்துள்ளது.
ICGS C – 437 இடைமறிப்புப் படகானது வட மேற்கு கடலோரப் பாதுகாப்புப் படைத் தளபதியின் நிர்வாகம் மற்றும் செயற்கட்டுப்பாட்டின் கீழ் குஜராத்தின் ஜக்ஹௌவில் நிலை நிறுத்தப்படும்.
எத்தகு கடல்சார் நிலவரங்களுக்கும் பதில்வினை புரியத்தகுத் திறனுடைய நவீன வழிகாட்டு மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் இப்படகில் பொருத்தப்பட்டுள்ளன.
பேரிடர்களின் போது கடலில் சிக்கித் தவிக்கின்ற படகுகள் மற்றும் கலன்களுக்கு உதவிகளை வழங்குதல், ரோந்து கண்காணிப்பு, தேடுதல், மற்றும் மீட்பு போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளத்தகுத் திறனை இப்படகு கொண்டுள்ளது.