தனிப்பட்ட கணினி மற்றும் கணினிக் கடவுச் சொல்லுக்கு வழி வகுத்த இணக்கமான நேரப் பகிர்வு அமைப்பில் (CTSS - Compatible Time-Sharing System) பணியாற்றிய பெர்ணான்டோ கோர்பேட்டோ என்பவர் தனது 93 வயதில் காலமானார்.
CTSS ஆனது வெவ்வேறு இடங்களில் உள்ள பல பயனர்களை ஒரே நேரத்தில் ஒரே கணினியைத் தொலைபேசி இணைப்புகள் மூலம் அணுக அனுமதிக்கின்றது.
இது 1960 மற்றும் 1970 ஆண்டுகளின் காலகட்டத்தில் அமெரிக்காவின் எம்ஐடி கணக்கீடு மையத்தில் மேம்படுத்தப்பட்டது.
CTSS ஆனது 1980களில் மேலும் நவீன எம்எஸ் - டாஸ் அமைப்புகளுக்கும் (MS-DOS), இன்று பயன்பாட்டில் உள்ள நவீன விண்டோஸ் மற்றும் இயங்குதள நடைமுறைகளுக்கும் (OSYxS – ஒஎஸ்எக்ஸ்) வழிவகுத்தது.