TNPSC Thervupettagam

இணை உருவாக்க நிதி

September 22 , 2023 431 days 283 0
  • தமிழக அரசானது 100 கோடி ரூபாய் மதிப்பிலான ‘இணை உருவாக்க நிதியினை’ நிறுவ உள்ளது.
  • இது தனியார் துறை துணிகர மூலதன முதலீட்டு (VC) நிதிகளில் பங்கேற்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான நிதி மாதிரியாகும்.
  • இந்த நிதியானது, முதலீட்டாளர்களால் நிர்வகிக்கப்பட்டு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கத் திட்டம் (StartupTN) மூலம் ஒருங்கிணைக்கப்படும்.
  • இது 1990 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட யோஸ்மா (‘முயற்சி’ என்று பொருள்படும்) மாதிரியின் கருத்தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப் பட்டது.
  • இது புதிய துணிகர மூலதன நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் புதுமையான தொழில்துறைகளைத் தொடங்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பிராந்திய, கிராமப்புறத் தாக்கம், பெண்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை சார்ந்த நிதிகளில் மாநில அரசு 40% நிதியை (10 கோடி ரூபாய் உச்சவரம்புடன்) பங்களிக்கும்.
  • தனியார் துறையால் முன்வைக்கப்படும் பிற கருப்பொருள் சார்ந்த நிதிகளில் (5 கோடி ரூபாய் உச்சவரம்புடன்) 20% நிதியினை மாநில அரசு வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்