2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் இனிமேல் செயல்படாது.
ஜூன் 02 ஆம் தேதி முதல், ஹைதராபாத் தெலுங்கானாவின் தலைநகரமாக மட்டுமே இருக்கும்.
2014 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது ஹைதராபாத் நகரமானது 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஒரு இணைத் தலைநகராக நிர்ணயிக்கப்பட்டது.