TNPSC Thervupettagam

இணைத் தொடர் பேரிடர் அபாய அறிக்கை 2023

November 7 , 2023 255 days 194 0
  • ஐக்கிய நாடுகள் சபை பல்கலைக்கழகம் - சுற்றுச்சூழல் மற்றும் மனிதப் பாதுகாப்பு கல்வி நிறுவனம் (UNU-EHS) ஆனது, ஐக்கிய நாடுகள் சபையின் இணைத் தொடர் பேரிடர் அபாய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, ஒவ்வோர் ஆண்டும் பல பேரிடர்களைப் பகுப்பாய்வு செய்து, அவை எவ்வாறு ஒன்றோடொன்று மற்றும் மனிதச் செயல்களுடன் தொடர்பு கொண்டு உள்ளன என்பதை விளக்குகிறது.
  • இந்தியா அதன் நிலத்தடி நீர் குறையும் வரம்பினை நெருங்குகிறது.
  • இந்த அறிக்கையின்படி, பஞ்சாபில் உள்ள 78% கிணறுகள் அதிகமாக பயன்படுத்தப் பட்டதாக கருதப்படுகிறது.
  • இந்த நீர்நிலைகள் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குக் குடிநீரை வழங்குகின்ற ஒரு நிலையில் 70% நீர் எடுப்பானது வேளாண்மைக்குப் பயன்படுத்தப் படுகிறது.
  • 2000 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பனிப்பாறைகள் ஆனது ஆண்டிற்கு 267 ஜிகா டன் பனியை இழந்துள்ளன.
  • இமயமலை, காரகோரம் மற்றும் இந்து குஷ் மலைகளின் சுமார் 90,000 பனிப்பாறைகள் ஆபத்தில் உள்ளதோடு அவற்றைச் சார்ந்திருக்கும் சுமார் 870 மில்லியன் மக்களும் ஆபத்தில் உள்ளனர்.
  • அடிக்கடி ஏற்படும் கடுமையான வானிலை நிகழ்வுகள் ஆனது, 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து ஏழு மடங்கு அதிக சேதங்களை ஏற்படுத்துகின்ற நிலையில், இதனால் 2022 ஆம் ஆண்டில் 313 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்