ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆனது, "இணைப்பு துண்டிக்கும் உரிமை" என்ற சட்டத்தை இயற்ற முயல்கிறது.
பணி நேரத்தைக் கடந்தும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் முதலாளிகள் பணியாளர்களை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படும் நேரத்தை ஒழுங்குமுறைப் படுத்துவதை இது பெரு நோக்கமாகக் கொண்டு ள்ளது.
இந்த மசோதாவின் கீழ், தேவைப்பட்டால் தவிர, பணியாளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளியுடன் தகவல் தொடர்பினை மேற்கொள்ள மறுப்பதற்கு உரிமை உண்டு.
பிரான்சு, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இதே போன்ற சட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையிலான எல்லைகளை நவீன தொழில் நுட்பம் குறைக்கிறது என்ற கருத்திலிருந்து இந்த 'இணைப்பு துண்டிக்கும் உரிமை' என்ற கருத்து உருவாகிறது.
இந்தியாவில், 2018 ஆம் ஆண்டு இணைப்பைத் துண்டிப்பதற்கான உரிமை மசோதா ஆனது, பாரமதி பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே என்பவரால் தயாரிக்கப் பட்டது.
இது வேலை சாராத தகவல்தொடர்புகளுக்கான பல்வேறு விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தினை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.