TNPSC Thervupettagam

இணைய சமவாய்ப்பு (Net Neutrality)

November 30 , 2017 2424 days 782 0
  • இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (TRAI – Telecom Regulatory Authority of India) இணைய சமவாய்ப்பு நிலையின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
  • தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் நெட்வோர்க் சேவைகளில் உள்ளடக்கத்தை (அதாவது இணையதங்கள்,செயலிகள்) அடிப்படையாக கொண்டு முன்னுரிமை அளித்தல், சில உள்ளடக்கங்களின் இணைய  அணுகலை தடுத்தல், டேட்டா வேகத்தை குறைத்தல் போன்ற பாரபட்சமான அணுகுமுறைகளை மேற்கொள்வதை TRAI அனுமதி மறுக்கிறது.
  • எந்த ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் இணைய தளங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் பாரபட்ச வேறுபாடு பார்க்காமல் அனைத்து இணையதளங்களுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு அணுகுதலை தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் வழங்குவதே இணைய சமவாய்ப்பு (Net Neutrality) எனப்படும்.
  • அமெரிக்காவின் இணைய சமவாய்ப்புக்கான விரிவான கோட்பாடுகளின் பின்பற்றலை மையமாகக் கொண்ட 2015-ஆம் ஆண்டின் சட்டங்களை நீக்குதல் குறித்து அமெரிக்க பெடரல் தொலைதொடர்பு கமிஷன் (FCC – Fdederal Communication Commission) நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் வேளையில் TRAI இந்த முன் மொழிவை மேற்கொண்டுள்ளது.
  • முக்கியமான சேவைகளின் (specialized Service) விலக்களிப்போடு பாரபட்சமற்ற கட்டுப்பாடுகளின் கீழ்  Internet of things (IoT) என்ற வசதியை  கொண்டு வரவும் TRAI உத்தரவிட்டுள்ளது.
  • சிறப்பு சேவைகள் மற்றும் உள்ளடக்கங்களின் விநியோக பிணையம் (Contact delivery Network) போன்றவற்றிற்கு இணைய சமவாய்ப்பின் அனைத்து விதிகளிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்