இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்
September 24 , 2023 477 days 266 0
கர்நாடக தொழிலாளர் நலத் துறையானது, அம்மாநிலத்தின் இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கு 4 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தினை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் பணியாற்றும் இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதும், இணைய வணிக நிறுவனங்களில் முழு நேர / பகுதி நேரச் சரக்குப் பொருள் விநியோகப் பணியாளர்களாக பணி புரியும் தொழிலாளர்கள் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மூலம் பயனடைவார்கள்.
1 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவமனைச் செலவுகள் அவர்களுக்குத் திரும்ப செலுத்தப்படும் மற்றும் பணியின் போது மற்றும் பணியில் இல்லாத போது ஏற்படும் விபத்துக்களில் ஆனால் நடப்பில் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் பலன்கள் கிடைக்கப் பெறும்.
ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக, இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு வழங்கிய இரண்டாவது மாநிலம் கர்நாடகா ஆகும்.
18 முதல் 60 வயதுக்குட்பட்ட இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள், வரி செலுத்துவதற்கான வரம்பிற்குள் வராதவர்கள் மற்றும் தற்போது PF/ESI பலன்களைப் பெறாத தனிநபர்கள் இந்தக் காப்பீட்டினைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
குறைந்த பட்சம் ஆறு மாதங்களாக ஏதேனும் ஒரு இணைய வணிக நிறுவனத்தில் இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளியாகப் பணிபுரியும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெற தகுதி உடையவர் ஆவர்.