TNPSC Thervupettagam

இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்

September 24 , 2023 299 days 193 0
  • கர்நாடக தொழிலாளர் நலத் துறையானது, அம்மாநிலத்தின் இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கு 4 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தினை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
  • அந்த மாநிலத்தில் பணியாற்றும் இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதும், இணைய வணிக நிறுவனங்களில் முழு நேர / பகுதி நேரச் சரக்குப் பொருள் விநியோகப் பணியாளர்களாக பணி புரியும் தொழிலாளர்கள் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மூலம் பயனடைவார்கள்.
  • 1 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவமனைச் செலவுகள் அவர்களுக்குத் திரும்ப செலுத்தப்படும் மற்றும் பணியின் போது மற்றும் பணியில் இல்லாத போது ஏற்படும் விபத்துக்களில் ஆனால் நடப்பில் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் பலன்கள் கிடைக்கப் பெறும்.
  • ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக, இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு வழங்கிய இரண்டாவது மாநிலம் கர்நாடகா ஆகும்.
  • 18 முதல் 60 வயதுக்குட்பட்ட இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள், வரி செலுத்துவதற்கான வரம்பிற்குள் வராதவர்கள் மற்றும் தற்போது PF/ESI பலன்களைப் பெறாத தனிநபர்கள் இந்தக் காப்பீட்டினைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • குறைந்த பட்சம் ஆறு மாதங்களாக ஏதேனும் ஒரு இணைய வணிக நிறுவனத்தில் இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளியாகப் பணிபுரியும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெற தகுதி உடையவர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்