இந்திய நாடானது, இணைய நெகிழ்திறன் குறியீட்டில், ஒட்டு மொத்தமாக 43 சதவீத மதிப்பெண்ணைப் பெற்று தெற்காசியப் பிராந்தியத்தில் ஆறாவது இடத்தில் உள்ளது.
பூடான் (58 சதவீதம்), வங்காளதேசம் (51 சதவீதம்), மாலத்தீவுகள் (50 சதவீதம்), இலங்கை (47 சதவீதம்), நேபாளம் (43 சதவீதம்) போன்ற நாடுகள் இந்தத் தரவரிசையில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன.
சந்தைத் தயார்நிலையைப் பொறுத்தவரை, இந்தியாவின் இணையச் சந்தையின் சுயக் கட்டுப்பாடு மற்றும் மலிவு விலைச் சேவை ஆகியவற்றினை வழங்கும் திறன் என்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
மேலும், இந்தியாவில் கைபேசிச் சேவைகளின் செயல்திறன் (29 சதவீதம்) ஆனது நிலையான வலையமைப்புச் செயல்திறனில் (55 சதவீதம்) கிட்டத்தட்ட பாதியளவாகவே உள்ளது.