சமீபத்தில் வெளியிடப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கையின் படி, இணைய அச்சுறுத்தல்களான தீம் பொருள் (Malware), ஸ்பாம்கள் (Spams), ரான்சம்வேர்கள் (Ransom wares) ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது மிகுந்த பாதிக்கப்படக் கூடிய நாடாக உள்ளது.
இந்த அறிக்கை இணைய பாதுகாப்புத் தீர்வுகள் அளிக்கும் நிறுவனமான சைமன்டெக் - ஆல் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியா இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறியுள்ளது.
2017ல் இந்த வகையான தாக்குதல்களுக்கு பாதிக்கப்படக் கூடும் முதல் நாடாக அமெரிக்காவும் (26.61 சதவிகித உலகளாவிய அச்சுறுத்தல்களுடன்) அதனைத் தொடர்ந்து சீனாவும் உள்ளன.
இந்தியா, 2016ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட11 சதவிகித உலகளாவிய அச்சுறுத்தல்களைக் காட்டிலும் சற்று குறைவாக 5.09 சதவிகித அச்சுறுத்தல்களைக் கடந்த ஆண்டு (2017) பெற்றுள்ளது.
இந்தியா, போட் (Bots) மற்றும் ஸ்பாம் தாக்குதல்களில் இரண்டாவது இடத்திலும், பிணைய வகை தாக்குதல்களில் மூன்றாவது இடத்திலும், ரான்சம்வேர் தாக்குதல்களில் நான்காவது இடத்திலும் உள்ளது.
இந்த உலகளாவிய அச்சுறுத்தல் தரவரிசை மால்வேர், ஸ்பாம், போட், பிஷிங்க் (Phishing), வலைதள தாக்குதல்கள் (Network Attacks), இணையதள தாக்குதல்கள் (Web Attacks), ரான்சம்வேர் மற்றும், கிரிப்டோமைனர் (Crypto miners) ஆகிய 8 அளவீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.