TNPSC Thervupettagam

இணைய முடக்கம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை

July 7 , 2022 747 days 341 0
  • இணையத்தை முடக்குவது மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கிறது என்றும் தகவல் பரிமாற்றத்தினைத் தடுக்கிறது மற்றும் பொருளாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது என்றும் OHCHR அறிக்கை குறிப்பிடுகிறது.
  • மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் என்பது பொதுவாக மனித உரிமைகளுக்கான அலுவலகம் அல்லது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான அலுவலகம் என்று அழைக்கப் படும்.
  • இணைய முடக்கம் என்பது ஒரு அரசாங்கத்தால் அல்லது அரசாங்கத்தின் சார்பாக தகவல் மற்றும் தகவல்தொடர்பு அமைப்புகளை அணுகுவதையும் அதனைப் பயன்படுத்துவதையும் வேண்டுமென்றே முடக்கச் செய்வதற்காக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் ஆகும்.
  • #KeepItOn என்ற கூட்டணியின் அறிக்கைப் படி, 2016-2021 ஆம் ஆண்டுகள் வரையில் 74 நாடுகளில் 931 இணைய முடக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.
  • #KeepItOn கூட்டணியானது உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இணைய முடக்க நிகழ்வுகளைக் கண்காணிக்கிறது.
  • இந்தியா 106 முறை இணைய இணைப்புகளைத் தடுத்துள்ளது அல்லது முடங்கி ள்ளது.
  • மேலும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இணைய முடக்கத்தில் குறைந்தது 85 முடக்கங்கள் ஜம்மு & காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்