மத்திய அமைச்சரவையானது, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இதில் 7,210 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இணையவழி நீதிமன்றத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு (2023-2027) ஒப்புதல் அளித்துள்ளது.
இது இந்திய நீதித்துறையின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாட்டிற்காகத் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தினை (ICT) நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மை முயற்சியாகும்.
அதன் சில எண்ணிம நடவடிக்கைகள்,
நீதிமன்ற நடவடிக்கைகளை எண்ணிம மயமாக்குவதற்கு எண்ணிம மற்றும் காகிதமில்லா நீதிமன்றங்களை நிறுவுதல்.
மரபார்ந்தப் பதிவுகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட நீதிமன்றப் பதிவுகளின் விரிவான எண்ணிமமயமாக்கல்.
நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு காணொளி வாயிலான வழக்காடல் வசதிகளை விரிவுபடுத்துதல்.
போக்குவரத்துசார் விதிமீறல்களை தீர்ப்பதற்கு வேண்டி இயங்கலை வழியிலான நீதிமன்றங்களின் நோக்கெல்லையினை விரிவுபடுத்துதல்.