மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான இணையவழி மேல்முறையீட்டுத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
இது வருவாய் வரி விவகாரங்களுக்கான மேல்முறையீடுகளை விரைவுபடுத்தும்.
நேரடி முறையீடு சாராத மேல்முறையீட்டுத் திட்டத்தின் கீழ், மேல்முறையீட்டு ஆணையருக்கும் வரி செலுத்துபவருக்கும் இடையிலான அனைத்து விதமான தகவல் தொடர்புகளும் தேசிய நேரடி முறையீடு சாராத மேல்முறையீட்டு மையம் (NFAC) மூலம் மேற்கொள்ளப் படுகின்றன.
இணையவழி மேல்முறையீட்டுத் திட்டத்தின் கீழ் வருமான வரி (மேல்முறையீடுகள்) இணை ஆணையர் மற்றும் வரி செலுத்துபவருக்கு இடையேயான பல தொடர்புகள் இணைய தளம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் தேசிய நேரடி முறையீடு சாராத மேல்முறையீட்டு மையம் ஈடுபடாததால் இது நேரடியான ஒரு செயல்முறையாகும்.
இது விரைவான தகவல்தொடர்புக்கு வழிவகுக்கச் செய்வதோடு மேல்முறையீடுகளைத் தீர்ப்பதில் உள்ள நேர இடைவெளியையும் இது குறைக்கும்.