TNPSC Thervupettagam

இணைய வழி மேல்முறையீடுத் திட்டம் 2023

June 6 , 2023 409 days 257 0
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான இணையவழி மேல்முறையீட்டுத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
  • இது வருவாய் வரி விவகாரங்களுக்கான மேல்முறையீடுகளை விரைவுபடுத்தும்.
  • நேரடி முறையீடு சாராத மேல்முறையீட்டுத் திட்டத்தின் கீழ், மேல்முறையீட்டு ஆணையருக்கும் வரி செலுத்துபவருக்கும் இடையிலான அனைத்து விதமான தகவல் தொடர்புகளும் தேசிய நேரடி முறையீடு சாராத மேல்முறையீட்டு மையம் (NFAC) மூலம் மேற்கொள்ளப் படுகின்றன.
  • இணையவழி மேல்முறையீட்டுத் திட்டத்தின் கீழ் வருமான வரி (மேல்முறையீடுகள்) இணை ஆணையர் மற்றும் வரி செலுத்துபவருக்கு இடையேயான பல தொடர்புகள் இணைய தளம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.
  • ஆனால் தேசிய நேரடி முறையீடு சாராத மேல்முறையீட்டு மையம் ஈடுபடாததால் இது நேரடியான ஒரு செயல்முறையாகும்.
  • இது விரைவான தகவல்தொடர்புக்கு வழிவகுக்கச் செய்வதோடு மேல்முறையீடுகளைத் தீர்ப்பதில் உள்ள நேர இடைவெளியையும் இது குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்