TNPSC Thervupettagam

இணைய வெளி மூலம் திரட்டப்படும் தொழிலாளர் நல நிதி வரி – கர்நாடகா

April 19 , 2025 19 hrs 0 min 40 0
  • கர்நாடக மாநில அமைச்சரவையானது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு கர்நாடக மாநில இணைய தள அடிப்படையிலான இணையவெளி மூலம் திரட்டப் படும் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன்) என்ற சட்ட மசோதாவினை அங்கீகரித்துள்ளது.
  • இது தற்போது ஓர் அவசரச் சட்டமாக அறிமுகப் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது தற்போது நிறைவேற்றப்பட்டால் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக இணைய தளம் அடிப்படையிலான இணையவெளி மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களின் முக்கிய நலனுக்காக என்று சட்டத்தை அறிமுகப்படுத்தும் நாட்டின் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா மாறும்.
  • மத்திய அரசானது, 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதல் முறையாக இணையவெளி மூலம் திரட்டப்படும் வகை தொழிலாளர்களை வரையறுக்கும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை (CoSS) நிறைவேற்றிய போதிலும், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
  • 2023 ஆம் ஆண்டில், இராஜஸ்தான் இணைய தள அடிப்படையிலான இணைய வெளி மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள் (பதிவு மற்றும் நலன்) சட்டத்தினை இயற்றியது.
  • தெலுங்கானா மாநில அரசும் இணைய வெளி மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள் சட்டத்தை இயற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்