TNPSC Thervupettagam

இணையச் சங்கேதப் பணம் சார்ந்த சொத்துக்களின் சந்தைகள் (MiCA)

April 29 , 2023 578 days 257 0
  • ஐரோப்பியப் பாராளுமன்றமானது, உலகின் முதல் விரிவான விதிகளின் தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது பெருமளவில் ஒழுங்குபடுத்தப்படாத இணையச் சங்கேதப் பணம் சார்ந்த நிதிச் சந்தைகளை அரசாங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமானது, 27 நாடுகள் அங்கம் வகிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமியற்றும் அமைப்பாகும்.
  • இந்த ஒழுங்குமுறை விதிகளானது இணையச் சங்கேதப் பணம் சார்ந்த சொத்துக்களின் சந்தைகள் (MiCA) எனப்படும்.
  • உறுப்பினர் நாடுகளின் முறையான ஒப்புதலுக்குப் பிறகு இது நடைமுறைக்கு வரும்.
  • உலகின் இணையச் சங்கேதப் பணம் சார்ந்த தொழில்துறையில் சுமார் 22% ஆனது மத்திய, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் செறிந்து காணப்படுகின்றன.
  • இவை 1.3 டிரில்லியன் டாலர் அளவு மதிப்புள்ள இணையச் சங்கேதப் பணம் சார்ந்தச் சொத்துக்களைப் பெற்றுள்ளன.
  • MiCA அமைப்பானது, "எந்தவொரு வகையான இணையச் சங்கேதப் பணம் சார்ந்த சொத்துக்களையும் பொது மக்கள் மத்தியில் வெளியிடப் படுகின்றச் சட்டப்பூர்வ நிறுவனங்கள்" என வரையறுக்கப் படுகின்ற, இணையச் சங்கேதப் பணம் சார்ந்தச் சொத்துக்களை வழங்கும் நிறுவனங்களுக்கு இணக்க விதிமுறைகளை விதிக்கும்.
  • இந்த விதிகள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டச் சேவைகளை வழங்கும் இணையச் சங்கேதப் பணம் சார்ந்தச் சொத்துச் சேவை வழங்குநர்களுக்கும் (CASPs) பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்