இணையச் சங்கேதப் பணம் சார்ந்த சொத்துக்களின் சந்தைகள் (MiCA)
April 29 , 2023 578 days 256 0
ஐரோப்பியப் பாராளுமன்றமானது, உலகின் முதல் விரிவான விதிகளின் தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது பெருமளவில் ஒழுங்குபடுத்தப்படாத இணையச் சங்கேதப் பணம் சார்ந்த நிதிச் சந்தைகளை அரசாங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமானது, 27 நாடுகள் அங்கம் வகிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமியற்றும் அமைப்பாகும்.
இந்த ஒழுங்குமுறை விதிகளானது இணையச் சங்கேதப் பணம் சார்ந்த சொத்துக்களின் சந்தைகள் (MiCA) எனப்படும்.
உறுப்பினர் நாடுகளின் முறையான ஒப்புதலுக்குப் பிறகு இது நடைமுறைக்கு வரும்.
உலகின் இணையச் சங்கேதப் பணம் சார்ந்த தொழில்துறையில் சுமார் 22% ஆனது மத்திய, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் செறிந்து காணப்படுகின்றன.
இவை 1.3 டிரில்லியன் டாலர் அளவு மதிப்புள்ள இணையச் சங்கேதப் பணம் சார்ந்தச் சொத்துக்களைப் பெற்றுள்ளன.
MiCA அமைப்பானது, "எந்தவொரு வகையான இணையச் சங்கேதப் பணம் சார்ந்த சொத்துக்களையும் பொது மக்கள் மத்தியில் வெளியிடப் படுகின்றச் சட்டப்பூர்வ நிறுவனங்கள்" என வரையறுக்கப் படுகின்ற, இணையச் சங்கேதப் பணம் சார்ந்தச் சொத்துக்களை வழங்கும் நிறுவனங்களுக்கு இணக்க விதிமுறைகளை விதிக்கும்.
இந்த விதிகள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டச் சேவைகளை வழங்கும் இணையச் சங்கேதப் பணம் சார்ந்தச் சொத்துச் சேவை வழங்குநர்களுக்கும் (CASPs) பொருந்தும்.