தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது (NCRB – National Crime Records Bureau) குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் வன்புணர்வு காட்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான முதன்மை ஆணையமாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் (MHA) நியமிக்கப்பட்டுள்ளது.
NCRB ஆனது வலைதளங்களில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படைப்புகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வன்புணர்வு காட்சித் தகவல்களை முறையீட்டின் அடிப்படையிலோ அல்லது தானே முன்வந்தோ நடவடிக்கை எடுக்கும்.
மேலும் இது முறையீடுகளைப் பெறவும் நடவடிக்கை எடுக்கவும் வலைதளமொன்றை தொடங்குவதை கட்டாயமாக்கியுள்ளது.