லூயிஸ் போன்சி (Luis Fonsi) மற்றும் டாடி யான்கீ (Daddy Yankee) இணைந்து உருவாக்கிய 'டெஸ்பாசிடோ (Despacito) என்ற பாடல் உலகில் இணையதளத்தில் அதிகம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இது முந்தைய 'ஜஸ்டின் பிபர் (Justin Bieber) இன் சாதனையை முறியடித்துள்ளது.
பூவேர்தோ ரீகோ (Puerto Rico) நாட்டைச் சேர்ந்த பாடகர் லூயிஸ் போன்சியின் இந்த ரேகேட்டன் (Reggaeton) வகை இசை, பெரும் பிரபலம் அடைந்துள்ளது .
'டெஸ்பாசிடோ அதன் அசல் மற்றும் ரீமிக்ஸ்ட் (Remixed) பதிப்புகளுடன் சேர்ந்து6 பில்லியன் ஸ்ட்ரீம்களை எட்டியுள்ளது.
ஜஸ்டின் பிபரின் 2015 ஆம் ஆண்டின் வெற்றி பாடல் சாரி (Sorry), 4.38 பில்லியன் முறை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது.