TNPSC Thervupettagam

இணையப் போர்க்காவல் படை

January 19 , 2018 2374 days 710 0
  • இணைய வழி அச்சுறுத்தல்கள், சிறார் ஆபாசப்படங்கள் மற்றும் இணையத்தில் பின் தொடருதல் (Online Stalking) போன்ற இணையம் தொடர்பான குற்றங்களை எதிர்கொள்வதற்காக இணையப் போர்க்காவல் படையினை (Cyber Warriors Police Force) நிறுவுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
  • இந்தக் காவல் படையானது, 2017ஆம் ஆண்டு நவம்பரில் உருவாக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சத்தின் இணைய மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவினுள் (Cyber Information Security Division) உள்ள தேசிய தகவல் பாதுகாப்புக் கொள்கை மற்றும் வழிகாட்டல் அமைப்பின் (National Information Security Policy and Guidance Wing) கீழ் இயங்கவிருக்கிறது.
  • இந்த அமைப்பினை மத்திய ஆயுதக் காவல் படையின் (Central Armed Police Force) வழியில் நிறுவப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருக்கிறது.
  • இணைய மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவின் இன்ன பிற இரு அமைப்புகளாவன :
  1. இணையக் குற்றங்கள்
  2. உள்நாட்டுப் பாதுகாப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்