இணையவழி சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அவசரச் சட்டம்
September 30 , 2022 790 days 527 0
இணையவழி சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்கான ஒரு அவசரச் சட்டத்தை வெளியிட தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மற்றும் காவல்துறை திருத்தச் சட்டத்தினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சட்டமானது இணையவெளியில் பணயம் அல்லது பந்தயம் கட்டுவதற்காக ஒரு தடையை விதித்தது.
முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துரு அவர்களின் தலைமையின் கீழ் மாநில அரசு ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழுவானது மாநிலத்தில் இணையவழி சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தச் செய்வதற்கான அவசரச் சட்டத்தை வெளியிடுவதற்குப் பரிந்துரை செய்தது.
அமெரிக்காவில் 60-70% இணையவழி சூதாட்டப் பயனர்களை ஒப்பிடுகையில், இந்திய மக்கள் தொகையில் 20% பேர் இணையவழி சூதாட்டங்களை விளையாடுகிறார்கள்.