2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ‘எண்ணிம ரீதியான குற்றப் பதிவு என்ற தவறான தகவல்’ மூலமான பண மோசடி நடவடிக்கைகள் மூலம் இந்தியர்கள் தோராயமாக 120.3 கோடி ரூபாயினை இழந்துள்ளனர்.
மேலும் வர்த்தக மோசடியில் 1,420.48 கோடி ரூபாயும், முதலீட்டு மோசடியில் 222.58 கோடி ரூபாயும், காதல்/பொருத்தம் பார்த்தல் (டேட்டிங்) செயலிகள் சார்ந்ததொரு மோசடியில் 13.23 கோடி ரூபாயும் இழந்துள்ளனர்.
தேசிய இணைய வெளிக் குற்ற அறிக்கையிடல் இணைய தளத்தில், இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 0.74 மில்லியன் புகார்கள் பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் புகார்கள் பதிவானது.
இணைய மோசடி வழக்குகளில் தமிழ்நாடு 9% பங்கைக் கொண்டுள்ளது.