இண்டஸ் இன்ட் வங்கியானது, இந்திய ரிசர்வ் வங்கியின் நிரல்படுத்தக்கூடிய மத்திய வங்கி எண்ணிம நாணயத்தினை (CBDC) ஒரு சோதனைமுறை அடிப்படையிலான பயன்முறையாக வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
இது வங்கியானது நிதியின் இறுதிப் பயன்பாட்டைக் குறிப்பாக கார்பன் மதிப்பீட்டுக் கடன் உருவாக்கத்திற்காக விவசாயிகளை இலக்காகக் கொண்டப் பயன்பாட்டினை நிரலாக்கக்கூடிய CBDC நாணயத்தின் மாற்று வடிவத்தை உள்ளடக்கியது.
மகாராஷ்டிராவின் இரத்னகிரி மாவட்டத்தில் 50 விவசாயிகளுக்கு நிரல்படுத்தக் கூடிய CBDC வழங்கும் திட்டத்தினை அந்த வங்கி தொடங்கியுள்ளதோடு, இது மேலும் 1,000 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
வேளாண் துறைக்கான புதுமையான நிதித் தீர்வுகளை ஏற்றுக் கொள்வதில் இது ஒரு மைல் கல்லைக் குறிக்கிறது.