TNPSC Thervupettagam

இதயம் காப்போம் - முதல் மதிப்பீடு

January 27 , 2025 27 days 114 0
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதியன்று தமிழக மாநில அரசு ஆனது, 'இதயம் காப்போம் திட்டத்தினை' அறிமுகப்படுத்தியது.
  • இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக என்று ஆரம்ப சுகாதார மையங்கள்/துணை சுகாதார நிலையங்களில் தீவிர இருதயப் பிரச்சினைகளுக்கான விரைவு உள்ளீட்டு மருந்துகளை (ஆஸ்பிரின், குளோபிடோக்ரெல் மற்றும் அட்டோர் வாஸ்டாடின்) வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இங்கு ஆய்வு செய்யப்பட்ட மக்கள்தொகையின் தரவுகள் ஆனது, பெரும்பாலான நோயாளிகள் ஆண்கள் (4,248 பேர்) என்பதைக் காட்டுகிறது.
  • ஆய்வுத் தரவில், சுமார் பாதி எண்ணிக்கையிலான நோயாளிகள் சுமார் 45 முதல் 60 வயதுடையவர்கள் (2,137 ஆண்கள் மற்றும் 1,148 பெண்கள்) தெரிய வந்துள்ளது.
  • அறிகுறிகள் வாரியாக, சுமார் 76.5% (4,964) பேர் ஆரம்ப சுகாதார மையங்களில் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர்.
  • இதைத் தொடர்ந்து 10.9% பேருக்கு படபடப்பும், 6.6% பேருக்கு கழுத்து / தாடை /கை / தோள்பட்டை வரையிலும் வலி பரவியது.
  • 97.7% நோயாளிகள் (6,346) உயிர் பெற்று நலம் பெற்றனர், அதே நேரத்தில் 2.2% (143) பேர் உயிரிழந்தனர் மற்றும் 0.1% (4) பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்