TNPSC Thervupettagam

இதுவரை இல்லாத வெப்பமிகு 12 மாதங்கள்

February 15 , 2024 155 days 161 0
  • கடந்த 12 மாதங்களில் (பிப்ரவரி 2023-ஜனவரி 2024) உலக சராசரி வெப்பநிலையானது மிக அதிகபட்சமாக பதிவாகி இருந்தது.
  • இது 1850-1900 வரையிலான தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் பதிவான சராசரியை விட 1.52° செல்சியஸ் அதிகமாக உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில், தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலைகளுடன் (1850-1900) ஒப்பிடும் போது, இந்த சராசரி வெப்பநிலை உயர்வை 2° செல்சியஸ் என்ற வரம்பிற்கு குறைவாகவும், பெரும்பாலும் 1.5° செல்சியஸ் என்ற வரம்பிற்குள் வைத்து இருக்கவும் உலக நாடுகள் பாரீஸ் நகரில் ஒப்புக் கொண்டன.
  • இந்த இலக்கை அடைய, உலக நாடுகள் ஒன்றிணைந்து 2030 ஆம் ஆண்டிற்குள் புவியை வெப்பமாக்கும் பசுமை இல்ல வாயுக்களான கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்றவற்றின் உமிழ்வை 43% வரை குறைக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்