TNPSC Thervupettagam

இதுவரை பதிவானதில் அதிக வெப்பமான கோடைக்காலம் – 2023

September 22 , 2023 434 days 299 0
  • 2023 ஆம் ஆண்டு கோடைக்காலமானது வட அரைக்கோளத்தின் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகவும் வெப்பமான கோடையாகும்.
  • கடந்த மாதமானது, அறிவியலாளர்கள் இதுவரை நவீன கருவிகள் மூலம் பதிவு செய்த வெப்பமான ஆகஸ்ட் மாதமாகும்.
  • இது இரண்டாவது வெப்பமான மாதமாகவும் அளவிடப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கோடை மாத சராசரி வெப்பநிலையை விட வெப்ப நிலை 2.2 டிகிரி ஃபாரன்ஹீட் (1.2 டிகிரி செல்சியஸ்) உயர்ந்தது.
  • இது தொழில்துறை காலத்திற்கு முந்தைய காலத்தின் சராசரியை விட சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் (2.7 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டின் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டமானது வரலாற்றில் இன்று வரையில் பதிவு செய்யப்பட்ட உலகின் வெப்பமான மூன்று மாத காலப்பகுதியைக் குறிக்கிறது.
  • ஜூலை மாதத்தில் பதிவான சராசரி உலக வெப்பநிலையானது கடந்த நூற்றாண்டின் சராசரியை விட 2°F (1.1°C) அதிகமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்