இத்தாலி நாட்டில் நடைபெற்ற எட்டாவது இத்தாலி ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிகட்டத்தில் நடப்பு சாம்பியனான அலெக்ஸாண்டர் ஜீவெரவ்வினை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த பட்டத்தை வென்றதன் மூலம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் களிமண் தரையில் தன்னுடைய 56-வது பட்டத்தை வென்றுள்ளார். அவற்றில் 8 பட்டங்களை ரோம் நகரில் வென்றுள்ளார். திருத்தப்பட்ட ATP உலகத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகையில், இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ATP தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை பின்னுக்குத் தள்ளி ரபேல் நடால் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.