2019 ஆம் ஆண்டு சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்முயற்சியில் (BRI) இணைவதற்காக கையெழுத்திட்ட ஒரே பெரிய மேற்கத்திய நாடு மற்றும் ஒரே ஜி7 நாடு இத்தாலி ஆகும்.
ஆனால் 2023 ஆம் ஆண்டு இத்திட்டத்திலிருந்து விலகுவதாக இத்தாலி உறுதி செய்து உள்ளது.
பட்டை மற்றும் பாதை முன்முயற்சி (பட்டை ஒன்று பாதை ஒன்று) என்பது 2013 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு உத்தி ஆகும்.
"கடன்-பொறியமைப்பு இராஜதந்திரம்" என்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் முத்திரை குத்துவதன் மூலம் அது விமர்சனங்களை எதிர்கொண்டது.