இத்தாலியின் ஜனாதிபதி செர்ஜியோ மட்டாரெல்லா முன்னாள் சர்வதேச பண நிதியத்தின் அலுவலர் கார்லோ கோட்டாரெல்லியை மே மாதம் 28-ம் தேதியன்று இத்தாலியின் இடைக்கால பிரதமராக நியமித்துள்ளார்.
யூரோ பகுதியின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு மார்ச் மாத தேர்தல்களுக்கு பிறகு புதிய அரசை தேடிக் கொண்டிருக்கின்றது.
ஆனாலும் சில நாட்களுக்குப் பிறகு, ஐந்து நட்சத்திர இயக்கமும், லீக் என்ற அமைப்பும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, கியுசிப்பி காண்டி தலைமையில் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இவர் ஜனநாயக கட்சியின் நிறுவன உறுப்பினரான பவுலோ ஜென்டிலோனிக்குப் பதிலாகப் பதவியேற்று இருக்கின்றார்.