TNPSC Thervupettagam

இத்தாலியின் முதல் கறுப்பின செனட் உறுப்பினர்

March 10 , 2018 2324 days 731 0
  • நைஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட இத்தாலியரான டோனி ஐவோபி   இத்தாலி நாட்டின் முதல் கறுப்பின செனட்டராக   தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் தற்போது இத்தாலியின் வலதுசாரி கட்சியின் குடியேற்ற விவகாரத்தின் தலைமை  செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
  • இத்தாலியின் முக்கிய குடியேற்ற முனையமான (Immigration hub) வட இத்தாலியிலுள்ள பிரேஸ்சியா தொழில் நகரத்திலிருந்து இவர் செனட் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2013-ஆம் ஆண்டு முதல் வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலியில் குடியேறிய 6,90,000-க்கும் அதிகமாக குடியேறியவர்களுக்காக #Stop invasion என்ற முழக்கப் பிரச்சாரத்தை டோனி ஐவோபி  தொடங்கினார்.
  • இத்தாலியில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும், கூட்டணிக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு பாராளுமன்றம் (Hung Parliament) ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
  • மட்டேயோ சால்வானி தலைமையிலான வலதுசாரி லீக் கட்சி, வலதுசாரி கூட்டணியில் பெரும் வாக்குகள் பெற்று பெரிய கட்சியாக உருவாகியிருப்பினும், ஆட்சியமைப்பதற்கு தனிப்பெரும்பான்மையின்றி காணப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்