இத்தாலிய நாட்டின் மேலவை ஆனது, சமீபத்தில் வாடகைத் தாய் (பதிலித் தாய்) முறையினை ஒரு "உலகளாவியக் குற்றமாக" அறிவிக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இத்தாலியில் ஏற்கனவே வாடகைத் தாய் முறையானது 2004 ஆம் ஆண்டு முதல் சட்ட விரோதமானதாக உள்ளது.
இந்தப் புதிய சட்டத்தின் கீழ், இத்தாலியர்கள் இந்த நடைமுறை சட்டப்பூர்வமாக உள்ள வெளிநாட்டிலும் கூட வாடகைத் தாய் முறையை அணுகுவது குற்றமாக அறிவிக்கப் படும்.
இது வாடகைத் தாய் முறையை இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இணையாக வைக்கிறது.
கிரீஸ் நாட்டில் வணிகம் சாராத வாடகைத் தாய் முறை 2002 ஆம் ஆண்டு முதல் சட்டப் பூர்வமாக உள்ளது.
பிரான்சு மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற நாடுகளும் வாடகைத் தாய் முறையைத் தடை செய்கின்றன.