TNPSC Thervupettagam
December 9 , 2018 2097 days 588 0
  • மாரத்தானில் உலக சாதனை படைத்தவரான கென்யாவைச் சேர்ந்த எலியுட் கிப்ஜோக் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த நீளம் தாண்டும் வீரரான கேத்தரின் இபர்குயன் ஆகியோருக்கு இந்த ஆண்டின் உலகத் தடகள ஆண் மற்றும் உலகத் தடகள பெண் விருதுகள் வழங்கப்பட்டன.
  • இவ்விருதை இவர்கள் இருவரும் முதன்முறையாக வென்றுள்ளனர்.
  • மொனாக்கோவின் கிரிமால்டி மன்றத்தில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தடகள விளையாட்டுக்கான கூட்டமைப்புச் சங்க (International Association of Athletics Federations - IAAF) விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின்போது இருவருக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
  • ஒலிம்பிக் சாம்பியனான கிப்ஜோக் உலக மாரத்தான் போட்டியில் 78 நொடிகளில் குறிப்பிட்ட தொலைவைக் கடந்து முந்தைய உலக சாதனையைத் தகர்த்தார்.
  • இபர்குயன் நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் (Triple Jump) ஆகிய இரண்டிலும் டைமண்ட் (வைர) லீக் சாம்பியன் ஆவார்.
  • மேலும் எலியட் கிப்ஜோக் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற லண்டன் மாரத்தானிலும் வெற்றி பெற்றுள்ளார்.
  • சுவீடனைச் சேர்ந்த வால்ட்டர் அர்மாந்த் டுப்ளன்டிஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிட்னி மெக்லாக்லின் ஆகியோர் முறையே ஆண்களுக்கான எழுச்சி நட்சத்திர விருது மற்றும் பெண்களுக்கான எழுச்சி நட்சத்திர விருது ஆகியவற்றை வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்