TNPSC Thervupettagam

இந்தி தினம் – செப்டம்பர் 14

September 15 , 2021 1078 days 381 0
  • இந்திய அரசின் இரண்டு அலுவல் மொழிகளுள் ஒன்றாக தேவநாகரி எழுத்து வடிவத்திலுள்ள இந்தி மொழி அறிவிக்கப்பட்டதைக் குறிக்கும் விதமாக இத்தினம்  ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • அரசியலமைப்பின் 343வது சட்டப்பிரிவின் கீழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் இந்திய அரசின் அலுவல் மொழிகளாகும்.
  • முதலாவது இந்தி திவாஸ் தினமானது 1953 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • உலக இந்தி தினமானது ஜனவரி 10 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதியன்று இந்தி மொழியானது இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.,
  • இந்த ஆண்டின் இத்தேதியானது பியோஹர் ராஜேந்திர சிம்ஹா அவர்களுடைய 50வது பிறந்த நாளாகும்.
  • பியோஹர் ராஜேந்திர சிம்ஹா அவர்கள் ஹசாரி பிரசாத் திவேதி, காகா கலேல்கர், மைதிலி சரண் குப்தா, மற்றும் சேத் கோவிந்த் தாஸ் ஆகியோருடன் இணைந்து இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிப்பதற்காக அரசியலமைப்பு நிர்ணய சபையில் அயராது விவாதித்து அதற்காக கடினமாக உழைத்தவராவார்.
  • இந்தி மொழியானது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் இந்திய-ஆரிய கிளையைச் சார்ந்ததாகும்.
  • இந்திஎன்ற சொல் பாரசீக மொழியில் தோன்றியதாகும்.
  • முதலாவது இந்திக் கவிதையானது புகழ்பெற்ற பாரசீக கவிஞர் அமீர் குஷ்ரூ அவர்களால் இயற்றப்பட்டது.
  • 1977 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் ஐக்கிய நாடுகள் அவையில் முதல்முறையாக இந்தியில் உரையாற்றினார்.
  • 1918 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி அவர்கள் இந்தி மொழியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிப்பது குறித்து முதல் முறையாக பேசினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்