TNPSC Thervupettagam
November 3 , 2020 1394 days 606 0
  • அறிவியல்சார் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மன்றமானது (Council of scientific and Industrial Research- CIIR) 2019 ஆம் ஆண்டில் இந்திஜென் (IndiGen) திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
  • இந்தத் திட்டமானது இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் குழுக்களிடமிருந்துப் பெறப்பட்ட மரபணுத் தொடர் வரிசைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஆரோக்கியமாக உள்ளனர் என்று தானாகவே அறிவிக்கப்பட்ட, 1029 இந்தியர்களின் மரபணுத் தொடராக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • இந்தத் திட்டமானது நோய்த் தடுப்பு மற்றும் நோய்க் கண்டறிதல் குறித்த மருத்துவ நடவடிக்கைகளுக்குப் பொருந்தக் கூடிய தீர்வுகளைக் கண்டறியவுள்ளது.
  • இது மரபணுத் தொற்று நோயியல் பற்றி அறிய வழிவகை செய்யும்.
  • இதன் கீழ், இந்த ஆய்வானது CSIR, மத்திய மரபணு மற்றும் மூலக்கூறு உயிரியியல் மையம் (CSIR-CCMB) மற்றும் மரபியல் & ஒருங்கிணைந்த உயிரியல் மையம் (CSIR-IGIB) ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வின்படி, உலக அளவில் ஒப்பிடுகையில் 32.6 இந்திய மரபணுத் தொடராக்கக் கூறுகள் தனித்துவம் மிக்கவையாக உள்ளன.
  • இந்தியாவில் உள்ள மரபணுப் பன்முகத் தன்மை மற்றும் அதிகமான மக்கள் அடர்த்தி ஆகியவை இதற்குக் காரணமாக உள்ளன.
  • உலகில் மரபணுத் திட்டத்தைத் தொடங்கிய முதலாவது நாடு ஐக்கிய இராஜ்ஜியம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்